கோட்டை பகுதியில் பதற்றம்: அங்கும் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!

கொழும்பு கோட்டை பகுதியில் திரண்டிருந்த பெருந்திரளான மக்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

சற்றுமுன்னர் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது