சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 45 பேர் கைது!

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை – குச்சவெளி கடற்பரப்பில் வைத்து இவர்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 11 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குவதனுடன், 20 வயதுக்கு கீழ்பட்ட 25 பேர் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தற்போது குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.