10 வீதம் வரையிலான பேருந்துகளே இயக்கப்படும் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

நாட்டில் தற்போது நிலவும் டீசல் நெருக்கடிக்கு மத்தியிலும் நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்துகள் சுமார் 10 வீதம் வரையில் இயங்குவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் இலங்கை போக்குவரத்து டிப்போவின் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருளை வழங்காமல் தனியார் பேருந்து தொழிற்துறையை அழிக்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க, டிப்போவில் இருந்து எரிபொருள் பெறும் சில தனியார் பேருந்துகள் அந்த எரிபொருளை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளதாக நேற்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.