எதிர்கால IMF நடைமுறைகள் குறித்து ஜனாதிபதி பேச்சு!

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, பேராசிரியர் சாந்தா தேவராஜன் மற்றும் கலாநிதி ஷர்மினி குரே ஆகியோருடன் இந்த கலந்துரையாடலை மேற்கொண்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதற்கான எதிர்கால சர்வதேச நாணய நிதியத்தின் நடைமுறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து இதன்போது பேசியதாக கூறியுள்ளார்.