இன்று செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமத்திற்கான 52நாள் பாதயாத்திரை ஆரம்பம்!

(காரைதீவு சகா.)

வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமஆடிவேல்விழா உற்சவத்தையொட்டிய இலங்கையின் மிகநீண்ட கதிர்காமப் பாதயாத்திரை இன்று 4ஆம் திகதி சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகின்றது.

வடக்கு – கிழக்கு – ஊவா ஆகிய 03 மாகாணங்களையும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மொனராகலை ஆகிய ஏழு மாவட்டங்களை இணைக்கும் 52 நாட்கள் 572 கி.மீற்றர் தூரம் கொண்ட இலங்கையின் மிக நீண்ட கதிர்காமப் பாதயாத்திரையானது சனிக்கிழமை 04ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகனாலயத்திலிருந்து விசேட பூஜை புனஸ்காரங்களுடன் ஆரம்பமாகவிருக்கின்றது.