ஆபத்தைக் கருத்திற் கொள்ளாத ஒரு கும்பலால் நாடு அதல பாதாளத்தில் விழுந்தது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு.

நாளுக்கு நாள் நாடு அதல பாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக சர்வதேச தர வரிசைப்படுத்தல்நிறுவகங்களிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் இந்த விடயத்தை கருத்திற் கொள்ளாத கும்பலாலயேநாடு இன்று கடும் பேரழிவிற்குள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.தன்னிச்சையான தனிநபர் சர்வாதிகாரம் மற்றும் அதற்கு சார்பான கும்பலால் எடுக்கப்பட்டதீர்மானங்கள் மற்றும் முடிவுகளாலயே நாட்டிற்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (31) இடம் பெற்ற அரச நிர்வாக சேவையைபிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனி நபர்களை இலக்காக் கொண்டு அரசியலமைப்புத் திருத்தங்கள் மேற்கொள்ளக்கூடாது என தெரிவித்தஎதிர்க்கட்சித் தலைவர், அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறைமைக்கு ஏற்பவேலைத்திட்டத்தை உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியினது நோக்கம்எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி 21 ஆவது திருத்தத்திற்கு எதிரானது என சில வங்குரோத்து குழுக்கள் பிரச்சாரத்தைமேற்கொண்டு வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், 21 ஆவது திருத்ததை நாட்டிற்கு அறிமுகப்படுத்தியஐக்கிய மக்கள் சக்தி அதை என்ன காரணத்திற்காக எதிர்க்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.