கொல்லனுலை தேவிலாமுனை ஸ்ரீ நரசிம்மகாளி அம்மன் ஆலய கும்பாவிஷேகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கொல்லனுலை தேவிலாமுனை ஸ்ரீ நரசிம்மகாளி அம்மன் ஆலய புனராவர்த்தன நூதன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பக்ஷ மகா கும்பாவிஷேகம் நாளை(01) செவ்வாய்க்கிழமை கிரியைகளுடன் ஆரம்பமாகி, புதன்கிழமை(02) எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வும், வியாழக்கிழமை(03) அதிகாலை கும்பாவிஷேகமும் நடைபெற உள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

கும்பாவிஷேகத்தினை தொடர்ந்து, 11நாட்கள் மண்டலாபிஷேகப்பூசைகள் இடம்பெற்று 14ம் திகதி பாற்குட பவனியும், பாலாபிஷேகமும், சங்காபிஷேகமும் நடைபெற உள்ளதாக குறிப்பிட்டனர்.