எரிவாயு தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய இன்னும் 45 நாட்கள் செல்லும் – வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு நிலைமையை சமாளிக்க இன்னும் ஒன்றரை மாதம் செலவிடப்படும் என லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒரு நாளைக்கு 30,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வெளியிட நிறுவனம் ஆலோசித்து வருவதாக நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

மோசமான வானிலை காரணமாக சரக்கு கப்பலில் இருந்து எரிவாயுவை இன்னும் இறக்க முடியவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே, எரிவாயு விநியோகம் தாமதமாகும் என்பதால், மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.