இந்தோனேசியாவின் உயர்ஸ்த்தானிகராலய அதிகாரிகளுடன் இளைஞர் நாடாளுமன்ற குழு சந்திப்பு

(ஹஸ்பர்)

இந்தோனேசியாவின் உயர்ஸ்த்தானிகராலய அதிகாரிகளுடன் இளைஞர் நாடாளுமன்ற குழு சந்திப்பொன்றை நேற்று (18) கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகராலயத்தில் சந்தித்தனர் .

குறித்த கலந்துரையாடலில் இளம் சமூகத்தினரின் கல்வி, கலாச்சார, விளையாட்டு மற்றும் தொழிநுட்ப அறிவுகளை விருத்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பானது இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹமத் சாதிக் மற்றும் களுத்துறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் முப்தி மற்றும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு அமைச்சருமான ற.முஹம்மது ஸபான் அவர்களோடும் இணைந்து மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிகழ்வில் தமிழ்பேசும் மக்களின் இராஜதந்திர நகர்வுகளை விருத்தி செய்யும் முகமாக இளம் சமூகத்தின் மத்தியில் இராஜதந்திர கல்விமுறைகள் மாதிரி ஐக்கிய நாடுகள் நிகழ்வுகள் மூலம் அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களினால் அங்கு கலந்துரையாடப்பட்டது.

இறுதியில் இலங்கை இளைஞர்களின் மத்தியில் கலாச்சாரத்தை மேம்படுத்தும் முகமாக செயலமர்வுகள் மற்றும் நிகழ்வுகளை முழுமையாக செய்வதற்கும் அதிகாரிகளினால் வாக்குறுதியளிக்கபட்டது. அத்தோடு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்களது செயற்பாடுகள் தொடர்பான முழுமையான புரிதல்களை அதிகாரிகள் வழங்கியிருந்தனர். அத்துடன் அவர்கள் கடந்த வருடம் திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் நடைபெற்ற கலை கலாச்சார நிகழ்வுக்கு வருகை தந்திருந்தமை தொடர்பில் அவர்களது மகிழ்ச்சியினை தெரிவித்தனர்.