நாட்டை ஊழலற்ற ஆட்சியை நோக்கி கொண்டு செல்வதே எல்லா மக்களதும் ஏகோபித்த எதிர்பார்ப்பாகும் – தேசிய ஐக்கிய நல்லிணக்க முண்ணனியின் தலைவர் தேசபிமாணி சுகத் பிரசாந்த

(ஹஸ்பர்)

நாட்டை ஊழலற்ற ஆட்சியை நோக்கி கொண்டு செல்வதே எல்லா மக்களதும் ஏகோபித்த எதிர்பார்ப்பாகும் இப்படியான ஜனநாயக ரீதியான போராட்டமே எமக்கு வெற்றியளிக்கும் என தேசிய ஐக்கிய நல்லிணக்க முண்ணனியின் தலைவர் தேசபிமாணி சுகத் பிரசாந்த தெரிவித்தார்.

திருகோணமலையில் இன்று (15) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில் இலங்கை நாட்டின் வளங்களை விற்பனை செய்து சூறையாடிய ஆட்சியாளர்களை மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற போராட்டமே தொடர்கின்றது இது போன்ற மக்களுடைய போராட்டம் மூலமே மஹிந்த ராஜபக்ச பல பிரயத்தனங்களுக்கு மத்தியில் வெளியேறிய போதும் 72 மணி நேரத்திற்குள் பிரதமரை பொறுப்பேற்க சஜீத், அநுர போன்றவர்கள் யாரும் முன்வரவில்லை கடந்த நல்லாட்சியில் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவே பொறுப்பேற்றார் எது எவ்வாறாக இருப்பினும் டொலர் பிரச்சினை எரிவாயு பெற்றோல் டீசல் வரிசை யற்ற தேசத்தை உருவாக்கவும் எதிர்கால இளைஞர்களுக்கான தேசமாக உருவாக்கவும் பாடுபட வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாக உள்ளது இல்லாது போனால் ஹோட்டா கோ ஹோம் என்றவாறு ரணில் விக்ரமசிங்கவும் வீடு செல்ல நேரிடும்.

இன மத பேதமற்ற முறையில் நாட்டை சுபீட்சமாக்க அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம் இதையே நாங்களும் விரும்புகிறோம் திருகோணமலை மாவட்டம் மூவினங்களை சேர்ந்த ஒற்றுமையாக வாழும் பிரதேசமாகும் நல்லதொரு ஆட்சியை எதிர்பார்க்கின்ற தேசமாக நாட்டை மிளிர வைக்க வேண்டும் என்பதே எல்லோரதும் எதிர்பார்ப்பாகும் என்றார்.