ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளோம்.அமெரிக்கா

இலங்கையின் பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டர் செய்தியை தூதுவர் வெளியிட்டுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவி இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடியை தீர்ப்பதில் புதிய பிரதமர் முக்கிய பங்காற்றுவார் என தூதுவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் மக்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என திருமதி ஜூலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.