ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தமை தொடர்பில் காலி முகத்திடல் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கும் நோக்கில் எதிர்காலத்தில் ரணில் கோ கம என்ற பெயரில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அமைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.