பரீட்சை திகதிகளில் மாற்றமில்லை

இந்த மாதம் 23ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள க. பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

பரீட்சைகளை நடத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே பரீட்சையைப் பிற்போடுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேப்போல் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதியும் உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 12ஆம் திகதி வரையும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.