தமிழ்.தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணத்திற்கான மேதின நிகழ்வு மட்டக்களப்பில்

தமிழ்.தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாணத்திற்கான மேதின நிகழ்வு மட்டக்களப்பில் மாநகர மேயர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது அரசடி சந்தியில் இருந்து ஆராம்பமாகி கல்லடி மீனிசை பூங்கா வளாகத்தில் நிறைவுற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரன்.இரா.சாணக்கியன், அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேந்திரன், சி.யோகேஸ்வரன், ஞா.சிறினேசன், கோடீஸ்வரன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் தொழில் சங்க பிரதிநிதிகள் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து இந் கொண்டனர்.