இலங்கை நிலமை உலக வங்கியும் கவலை

அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள்  அமைதியாக  போராட்டம் நடத்தியவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மை குறித்து ஆழ்ந்த கவலையளிப்பதாக உலக வங்கி நேற்று (09) தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் மாலத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கையின் பணிப்பாளர் ஃபாரிஸ் எச். ஹடாத் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில், “இலங்கையில் நடக்கும் வன்முறைகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை விரைவாக மீட்டெடுப்பதற்கான பாதையை வன்முறைகளுக்கு காரணமானவர்கள் தடை செய்கிறார்கள் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.