கோட்டாபய ராஜபக்ஷவின் ஜோதிடர் ‘ஞானக்கா’வின் வீடும் தாக்கப்பட்டது

அநுராதபுரத்திலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஜோதிடர் ‘ஞானக்கா’வின் வீடும் தாக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலையில் சுவரை உடைத்து வீட்டினுள் நுழைந்து தீ வைத்து எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கல்வீச்சுத் தாக்குதலில், வீட்டின் கண்ணாடிகள் அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த பெண் நடத்தும் விகாரை மீது தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது தடுத்து நிறுத்தப்பட்டதாகவம் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் விகாரை வளாகத்தில் சிறிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.