நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் தாக்குதல் குழுவுடன்

காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த வந்தவர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அடங்குவதாககொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியட்டுள்ளது..

அமைச்சர் சனத் நிஷாந்த கம்புகளை ஏந்தியபடி குண்டர் கும்பலுடன் போர்க்களத்தில் சுற்றித்திரிவதை காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் குண்டர் தாக்குதலில் 23க்கும் மேற்பட்டோர் காயமடைந்து தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.