கலவரம் காரணமாக 16 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க காலிமுகத்திடலுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அவர் அவ்விடத்திற்கு வருகை தந்துள்ளார்.

இதற்கிடையில், பல தொழிற்சங்க தலைவர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவும் சம்பவ இடத்திற்கு வந்திருந்தார்.

இருப்பினும், அவர் வாகனங்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினார்.

இதேவேளை, காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் கலவரம் காரணமாக 16 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.