கோட்டாகோகமவுக்கு செல்ல முயற்சி; உச்சக்கட்டப் பதற்றம்

மைனாகோகாமா மீது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், கோட்டாகோகமவுக்கு செல்வதற்கும் அவர்கள் தயாராகி வருகிறார்கள்.

இதேவேளை பொலிஸார் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை கோட்டாகோகமவுக்கு செல்வதைத் தடுத்து வருகிறார்கள். எவ்வாறாயினும் கோட்டாகோகமவில் உள்ள கூடாரங்களை பொலிஸார் அகற்றவில்லை என்றால், நாங்கள் அவற்றை அகற்றி அங்கிருப்பவர்களை விரட்டியடிப்போம் எனவும் அங்கிருப்பவர்கள் எச்சரிப்பதை அவதானிக்க முடிகிறது.