10 மணிநேர மின்வெட்டு; மின்சார சபையின் அறிவிப்பு

இன்று (08) முதல் 10 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மின்சார சபையின் தலைவர் எம். சி.பெர்டினாண்டோ இதனை தெரிவித்தார்.

தற்போது 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக நிலவும் மின்வெட்டு எதிர்காலத்தில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.