புகையிரத நிலைய சங்கங்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு

நாளைய தினம் நாடு தழுவிய ஹர்த்தாலில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.