40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிய கப்பல் நாட்டினை வந்தடைந்தது!

இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிய கப்பல் ஒன்று நேற்று(புதன்கிழமை) இலங்கையினை வந்தடைந்துள்ளது.

இந்தியா தனது உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இதுவரை 4 இலட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளினை வழங்கியுள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் அதிக எரிபொருள் இருப்புக்கள் வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.