மட்டக்களப்பு விமானப்படையினரால் குருதி கொடையாக வழங்கி வைப்பு

மட்டக்களப்பு விமானப்படை தளத்தில் இன்று(04) புதன்கிழமை இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

விமானப்படை வீரர்கள் குருதியை கொடையாக வழங்கினர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியினர் இதனை பெற்றுக்கொண்டனர்.
இரத்த வங்கியின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் தி.தவனேசன் உள்ளிட்டவர்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
மாவட்டத்தில் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இவ்வாறான இரத்ததான நிகழ்வுகள் இரத்த வங்கினரின் கோரிக்கமைய நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.