கொக்கட்டிச்சோலை பகுதியில் யானை தாக்கி ஒருவர் பலி

கொக்கட்டிச்சோலை காவல் பிரிவிற்குட்பட்ட சாமந்தியாறு பகுதியில் யானை தாக்கி ஒருவர் மரணமான சம்பவம் நேற்று(03) செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கொக்கட்டிச்சோலை கிராமத்தினைச்சேர்ந்த  5பிள்ளைகளின் தந்தையான வெள்ளத்தம்பி குமரகுரு (வயது 72) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று இரவு மூன்று யானைகள் குறித்த பகுதிக்குள் உள்நுழைந்து,  அருகில் உள்ள வீட்டில் இருந்த மரங்களையும், பயிர்களையும் சேதப்படுத்திவிட்டு, மரணமடைந்தவரின் வீட்டின் முன்னால் உள்ள காணியில்  உலாவியுள்ளது.
குறித்த நபர் வீட்டை விட்டு வெளியில் சென்ற போது, பின்னால் சென்று குறித்த யானை தாக்கியுள்ளது. சம்பவ இடத்திலேயே குறித்த நபர் மரணமடைந்துள்ளார்.