காலி முகத்திடல் வீதிக்கு புதிய பெயரை சூட்டிய போராட்டக்காரர்கள்!

ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகிலுள்ள காலி முகத்திடலுக்கு போராட்டக்காரர்கள் புதிய பெயரை சூட்டியுள்ளனர்.

அதன்படி, குறித்த வீதிக்கு இலஞ்ச வீதியென (Bribe road) போராட்டக்காரர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

ஏற்கனவே, காலிமுகத்திடலில் “கோட்டா கோ கம“ எனும் பெயரிலான கிராமத்தை உருவாக்கியுள்ள போராட்டக்காரர்கள், அங்கு கூடாரமிட்டு 26ஆவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.