மத்திய கலாசார நிதியத்தின் புதிய இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் கௌரவ பிரதமரினால் இணையத்தில் வெளியிடப்பட்டது

(வாஸ் கூஞ்ஞ)

மத்திய கலாசார நிதியத்தின் புதிய இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் ஆகியன கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் செவ்வாய்கிழமை (03) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து இணையத்தில் வெளியிடப்பட்டது.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நாட்டின் கலாசாரம் தொடர்பில் பிரசாரம் செய்வதும்இ சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.

மத்திய கலாசார நிதியத்தின் புதிய இணையத்தளத்தை உஉக.பழஎ.டம இல் அணுகலாம் மற்றும் ‘எங்கள் பாரம்பரியம்’ (‘අපේ උරුමය’) (ழுரச hநசவையபந) என்ற புதிய யூடியூப் சேனலை அணுகலாம்.

மத்திய கலாசார நிதியம் இலங்கையின் கலாசார பாரம்பரியத்தை நிர்வகிக்கும் முன்னணி நிறுவனமாகும்இ மேலும் இலங்கையின் முக்கிய தொல்பொருள் தளங்களின் பாதுகாப்புஇ ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்இ சுவரோவியங்கள் மற்றும் பிற தொல்பொருட்களை பாதுகாத்தல் மற்றும் தொல்லியல் துறையில் மனித வளங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இலங்கையின் கலாசார சுற்றுலாத்துறையை வழிநடத்தி இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய கலாசார நிதியம் பங்களிப்பு செய்கிறது.

ஆரம்பத்தில் கலாசார முக்கோணத்தை அடிப்படையாகக் கொண்டுஇ இந்த நிறுவனம் ஆறு முக்கிய தொல்பொருள் தளங்களுடன் தொடங்கப்பட்டது மற்றும் அதன் பாரம்பரிய முகாமைத்துவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தி அதன் நடவடிக்கைகள் தீவின் பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதற்கமையஇ இதுவரை நாடளாவிய ரீதியில் 24 முக்கிய தொல்பொருள் தளங்களில் இந்த பாரம்பரியத்தை நிர்வகிப்பதற்கு மத்திய கலாசார நிதியம் பங்களித்து வருகிறது.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கஇ புத்தசாசனஇ சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனஇ தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்கஇ மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க அதன் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் உபுல் பண்டாரநாயக்கஇ ஊடகப் பணிப்பாளர் லலித் உதேச மதுபானு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.