சுவாமி விபுலானந்தரின் 130வது பிறந்த தினம்

சுவாமி விபுலானந்தரது 130வது பிறந்ததின  நிகழ்வு இன்று(03) செவ்வாய்க்கிழமை கல்லடி உப்போடையில் அமைந்துள்ள  சுவாமி விபுலாநந்தர்  மணி மண்டபத்தில் உள்ள அவரது  சமாதியில் இடம்பெற்றது.

சுவாமி விபுலாநந்தர்  நூற்றாண்டு சபையின் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது,  ராமகிருஷ்ண மிஷன் சுவாமி அடிகளாரின் சமாதிக்கு பூசை செய்து,  மலரஞ்சலி செலுத்தி, வணங்கி விபுலானந்தரின் பணிகள் தொடர்பிலும் கருத்துரை நிகழ்த்தினார்.
சுவாமிகளால் பாடப்பட்ட பாடலும் பாடப்பட்டது. நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் மலர்தூபி வணக்கம் செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.