தாக்குதலுக்கு உள்ளான இரு ஊடகவியலாளர்கள் வைத்தியசாலையில்

(வாஸ் கூஞ்ஞ)

வவுனியா பகுதியில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொலிசார் விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை நாட்டில் எரிபொருள் உட்பட பல அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடும் அத்துடன் இவ் பொருட்களை பெறுவதில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தும் இவை கிடைக்காது இலவு காத்த கிளிபோல் செல்வோரின் நிலமையும் காணக்கூடியதாக இருக்கின்றது

இவ்வாறான நிலைமைகளை பல இடங்களிலும் ஊடகவியலாளர்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வருதையும் நோக்கக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறன நிலையில் வவுனியா பகுதியில் சனிக்கிழமை (30) ஒரு எரிபொருள் நிலையத்துக்குச் சென்ற கதீலன் மற்றும் சஜீபன் ஆகிய இரு ஊடகவியலாளர்கள் எரிபொருள் நிலையத்துக்கு சென்றிருந்தபொழுது இவர்கள் இருவரும் அவ் எரிபொருள் நிலைய முகாமையாளர் மற்றும் அவ் நிலைய ஊழியர்களால் தாக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிசார் விசாரiiயை மேற்கொண்டு வருகின்றனர்.