மட்டு மேற்கு கல்வி வலய 500மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 500மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பெரியபுல்லுமலை றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இன்று (01)இடம்பெற்றது.

குறித்த வலயத்திற்குட்பட்ட பெரியபுல்லமலை றோமன் கத்தோலிக்க பாடசாலை, கரடியனாறு இந்து வித்தியாலயம், கோப்பாவெளி பாடசாலை, கித்துள் ஸ்ரீ கிருஷ்ணா வித்தியாலயம்,  கரடியனாறு மகா வித்தியாலயம், வேப்பவெட்டுவான் பாடசாலையில் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கே இக்கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
 லலித் அதுலத்முதலி ஞாபகார்த்த மன்ற நிலையமும் தெஹிவளை மற்றும் ரத்மலானை அபிவிருத்தி அமைப்பு ஆகியன இணைந்து இதனை வழங்கி வைத்தன.
இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கேசரலால்  குணசேகர, மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் அகிலா கனகசூரியம், மகா ஓயா வலயக்கல்விப்பணிப்பாளர் என். பி. சி. ரி. நிசங்க, மட்டக்களப்பு மேற்கு பிரதிகல்விப்பணிப்பாளர் ரி. யசோதரன்,  ஏறாவூர் பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் அ. ஜெயக்குமணன், பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.