மே 1 மற்றும் 3 ஆம் திகதிகளில் மின் துண்டிப்பு இல்லை!

மே 1 முதல் மே 4 வரையான நான்கு நாட்களுக்கான மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 1ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை வரை 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.