உஹன பிரதான வீதியில் விபத்து.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள உஹன பிரதான வீதியில் வியாழக்கிழமை (28) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊஹன பகுதியிலிருந்து சென்ற லொறியும், நுகேலந்த பகுதியிலிருந்து சென்ற மோட்டார் சைக்கிளும் மோதியதனாலேய இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு வாகனங்களும் அருகிலிருந்த வயற்பகுதியில் வீழ்ந்துள்ளன. இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் காயமடைந்து செனரத்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.