இலங்கையர்கள், நன்கொடையாளர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக அறிவித்தது இலங்கை மத்திய வங்கி!

அந்நிய செலாவணி கையிருப்பு குறைவதால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இத்தகைய நன்கொடைகள் மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த அன்னியச் செலாவணி பெறுபேறுகளைப் பேணுவதற்கும் அவற்றை வெளிப்படைத் தன்மையில் பயன்படுத்துவதற்கும் மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றையும் மத்திய வங்கியின் ஆளுநர் நியமித்துள்ளார்.

நன்கொடைகள் பற்றிய தகவல்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலமோ அல்லது 076 83 15 782 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமோ பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.