காலிமுகத்திடலில் பதற்றம்.

அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்வோம் என தெரிவித்து நடத்தப்பட்டும் இந்த போராட்டத்தில் கையெழுத்து சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த தகவல்களை சிலர் திருடியுள்ளதாகவும், அவர்களை கையும் களவுமாக தற்போது பிடித்ததனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தகவல்களை திருடியவர்கள் அரசுக்கு ஆதரவானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.