அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு – சி.வி.விக்னேஸ்வரன்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன் 20ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவை வழங்குகின்ற போதிலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.