கப்ராலின் பயணத் தடை மேலும் நீடிப்பு !!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த தடை விசாரணை முடியும் வரை அமுலில் இருக்கும் என கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கிலேயே கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும், அடுத்த விசாரணைக்காக ஜூன் 7 இல் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்ட அதேவேளை கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.