வத்திக்கானில் பாப்பரசர் பிரான்சிஸை இன்று சந்திக்கின்றனர் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்

2019ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பாப்பரசர் பிரான்சிஸை இன்று (திங்கட்கிழமை) சந்திக்கின்றனர்.

கொழும்பு போராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் அவர்கள் இன்று பாப்பரஸரை வத்திக்கானில் சந்திக்கவுள்ளனர்.

இத்தாலியில் வாழும் இலங்கையர்களின் பங்குபற்றுதலுடன் புனித பேதுரு பேராலயத்தில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் விசேட புனித ஆராதனை நடைபெறவுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினருடன் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் கடந்த 21ஆம் திகதி வத்திக்கானுக்கு சென்றிருந்தார்.

கொழும்பு பேராயருக்கும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இற்கும் இடையில் இடம்பெற்ற அண்மைய சந்திப்பின் போது அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த விஜயம் அமைந்துள்ளது.