அபயம் அமைப்பினால் உயர்தொழிநுட்பத்துடனான நிழல் பிரதி இயந்திரம் வழங்கி வைப்பு

அபயம் பவுண்டேசன் அமைப்பினால் பால்சேனை பாடசாலையில் அமைந்துள்ள டிஜிட்டல் மற்றும் நிகழ்நிலை கற்றல் நிலையத்திற்கு உயர்தொழிநுட்பத்துடனான நிழல் பிரதி இயந்திரம் கடந்த சனிக்கிழமை(23) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிழல்பிரதி இயந்திரத்தினை பாடசாலையின் அதிபர் உதயகுமாரிடம் அபயம் அமைப்பின் உறுப்பினரும் வைத்தியருமான தி.தவநேசன் கையளித்தார்.

கஸ்ட, அதிகஸ்ட பிரதேச மாணவர்களுக்கு மாதிரி பரீட்சைகள்,செயலட்டைகள், குறிப்பேடுகள் போன்றவற்றை தயாரித்து வழங்கி அதன்மூலமாக கல்வியில் உயர்பெறுபேற்றை பெற வைப்பதனை நோக்காக கொண்டு இந்நிழல் பிரதி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கதிரவெளி பாடசாலையின் அதிபர் நாகேந்திரன், கண்டலடி பாடசாலையின் அதிபர் கருணைநாதன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ரூபன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.