நஞ்சு மனிதர் நூல் வெளியீடு

சு. சந்திரகுமார் எழுதிய நஞ்சு மனிதர் நூல் வெளியீடு இன்று(24)ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஆரம்ப விவசாய செய்கை முறையும், தற்கால விவசாயத்தில் நஞ்சு பாவனையினால் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து பேசும் நாடகத்தினையும், ஆற்றுகையின் போது பெற்ற அனுபவத்தினையும் உள்ளடக்கியதாக இந்நூல் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியமும் அடிப்புற அரங்கச் செயற்பாட்டு பேரவையும் இணைந்து நடத்திய இந்நூல் வெளியீட்டு நிகழ்வு த. மேகராசா தலைமையில் நடைபெற்றது.

நூலின் முதற்பிரதியை சி.வரதகரன் பெற்றுக்கொண்டார். வெளியீட்டு உரையை கவிஞர் அழகு தனு நிகழ்த்தினார். மதிப்பீட்டு உரையை முதுநிலை விரிவுரையாளர் க. மோகனதாசன் நிகழ்த்தியதுடன், ஏற்புரையை சு.சந்திரகுமார் ஆற்றினார்.

இதன் போது நூலாசிரியர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டார். வாழ்த்துக்கவியை அரசையூர் பகீ பாடினார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பேராசிரியர் ஜீ. கென்னடி கலந்து கொண்டமையுடன், மேனாள் பேராசிரியர் சி. மௌனகுரு உள்ளிட்ட பேராசிரியர்கள், முதுநிலை விரிவுரையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.