மூன்று நாட்களுக்கு ஒருதடவையாவது பெற்றோலை வழங்குங்கள் : கோரிக்கை விடுத்த பட்டிப்பளை பிரதேச மக்கள்

மூன்று நாட்களுக்கு ஒருதடவையாவது பெற்றோலை வழங்குங்கள் என மண்முனை தென்மேற்கு பிரதேச மக்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின்  பட்டிப்பளையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை  நீண்ட வரிசையில் நின்றே மக்கள் நேற்றைய தினம்(21) பெற்றுக்கொண்டனர்.

இதன்போதே இவ்வேண்டுகோளை மக்கள் விடுத்துள்ளனர்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நான்கு நாட்களுக்கு பிறகே பெற்றோலை பெற்றுக்கொள்ளவேண்டி உள்ளது. இதற்காக நாளையொன்றை செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் அன்றாடம் கூலி வேலைக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

எமது பிரதேசத்தில் எல்லா.இடங்களுக்கும் பொது போக்குவரத்து சேவை இல்லை, கிராமங்களும் அருகருகில் இல்லை, முச்சக்கரவண்டிகளில் பயணிப்பதற்கும் அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.

நான்கு நாட்களுக்கு பிறகு 3லீற்றர் பெற்றோல் பெற்றுக்கொண்டால் அது மூன்று நாட்களுக்கும் போதுமானதாகவில்லை, பொருட்கள் கொள்வனவுக்கோ, அரச சேவைகளை பெறுவதற்கோ, அவசர தேவைகளுக்கோ செல்லமுடியாத துர்பாக்கிய நிலை காணப்படுகிறது. பிரதேசத்தில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பு நிலையமே உள்ளது. இந்நிலையத்தின் ஊடாக மூன்று நாட்களுக்கு ஒரு தடவையாவது பெற்றோலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள் என கோரிக்கை விடுத்தனர்