தற்போது ஒரு பாரதூரமான பேரிடருக்கு முகம் கொடுத்துள்ள எமது நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தான் பலமுறை கேள்வி எழுப்பினாலும், அரசாங்கத்திடம் இருந்து எந்த வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரசாங்கம் தற்போது அமைச்சரவையை கூட நியமித்துள்ள போதிலும் இன்னும் வழிதவறியே செல்கின்றனர் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நாட்டை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை உடனடியாக அறிவிக்குமாறு அவர் அரசாங்கத்திற்கு சவாலும் விடுத்தார்.