வன்முறைகள் தொடர்ந்து நடைபெறாதிருக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் – மௌலவி எஸ்.ஏ.அசீஸ்

(வாஸ் கூஞ்ஞ)

வன்முறைகள் தொடர்ந்து நடைபெறாதிருக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று மன்னார் மூர் வீதி பெரிய பள்ளிவாசல் மௌலவி எஸ்.ஏ.அசீஸ் அவர்கள் ஏப்பிரல் 21 அன்று குண்டு தாக்குதலில் மரணித்தவர்களின் நினைவேந்தல் தினம் மன்னாரில் அன்றையத் தினம் நடைபெற்றபோது இதில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மூர் வீதி பெரிய பள்ளிவாசல் மௌலவி எஸ்.ஏ.அசீஸ் அவர்கள் தொடர்ந்து தெரிவிக்கையில்

ஏப்பிரல் 21 குண்டு தாக்குதலில் மரணித்த எமது சகோதரர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். இவ்வாறான நிகழ்வு எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்.

இவ் தாக்குதலை செய்த உண்மையான குற்றவாளிகள் யார் என்று இன்னும் கண்டுபிடிக்காத நிலை தொடர்கின்றது. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

அப்பொழுதுதான் நீதியைக் கேட்டு நிற்போருக்கு துன்பத்திலும் ஒரு அமைதி அவர்களுக்கு பிறக்கும்.

ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் இதன் நிமித்தம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த நாளில் நாங்கள் வேண்டி நிற்கின்றோம் என்றார்.