ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியால் பேராயர் மால்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களுக்கு கடிதம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்துவதாகவும், ஜனாதிபதி ஆணைக்குழுவின்அறிக்கையின் அனைத்து உள்ளடக்கங்களும் மக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு முன்வைப்பதாகவும், மேலும் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதாகவும் என உறுதிப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியால் பேராயர் மால்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கையொப்பத்துடன் கூடிய கடிதமொன்று இன்றைய(21) தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உரிய விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும் கூடிய அவதானம்செலுத்தி வரும் ஐக்கிய மக்கள் சக்தி,குறித்த தாக்குதலின் பின்னணியில் உள்ள சதியைவெளிக்கொணர்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் குறித்த கடிதம் மூலம்உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.