பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால் பௌத்த சங்க சாசனத்தை அமுல்படுத்துவோம் – பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எச்சரிக்கை!

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், பௌத்த சங்க சாசனத்தை அமுல்படுத்துவதாக மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எச்சரித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வழங்குமாறு கோரி ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களிடமும் மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடிதம் ஒன்றின் மூலம் அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறுகோரி, கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் சாதகமாக அவதானம் செலுத்தப்படாமை குறித்து அவர்கள் தங்களது கவலையை வெளியிட்டுள்ளனர்.

புதிய அமைச்சரவை நியமனம் பிரச்சினைக்கு தீர்வாகாது எனவும் 20ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி 19ஆம் திருத்தச் சட்டத்தின் சாதகமான அம்சங்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.