ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
இதேவேளை, அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோரினால் ஜனாதிபதி பதவி விலகத் தயார் என சபாநாயகர் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறிமதாச நாடாளுமன்றில் தெரிவித்தார்.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்