மகிந்த தலைமையில்21வது திருத்தச் சட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள்

21வது திருத்தச் சட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பிரதமர் தலைமையில் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் அலரிமாளிகைக்கு  சென்று வந்துள்ளதாக தெரியவருகிறது.

கடந்த சில நாட்களாக அலரிமாளிகையில் பிரதமரின் தலைமையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.