பிள்ளையான், வியாழேந்திரன் என மேலும் நான்கு பேருக்கு இராஜாங்க அமைச்சு பதவி!

சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), வியாழேந்திரன் என மேலும் நான்கு பேருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி சுரேன் ராகவன் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் ச.வியாழேந்திரன் இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுரேன் ராகவன் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து மாற்றப்பட்டு உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சிவநேசதுரை சந்திரகாந்தன் கிராம வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் மொஹமட் முஷாரப் புடவைக் கைத்தொழில், உள்ளுர் உற்பத்தி இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படப்போவதாக மொஹமட் முஷாரப் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.