சற்று முன் புதிய அமைச்சரவை பதவியேற்பு.

 

இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையிலேயே தற்போது பதவிப்பிரமாணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 17 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ளதாக தெரியவருகிறது.

தினேஷ் குணவர்த்தன – பொதுசேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர்

டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில் அமைச்சர்

ரமேஷ் பத்திரண – கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்

பிரசன்ன ரணதுங்க – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்

திலும் அமுனுகம – போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர்

கனக ஹேரத் – பெருந்தெருக்கல் அமைச்சர்

விதுர விக்ரமநாயக்க – தொழிற்துறை அமைச்சர்

ஜானக்க வக்கும்பர – விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர்

செஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர்

மொஹான் பிரியதர்சன டி சில்வா – நீர்வழங்கல் அமைச்சர்

விமலவீர திசாநாயக்க – வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர்

காஞ்சன விஜேவிக்ரம – வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர்

தேனுக விதானகே – இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

நாலக கொடஹேவா – ஊடக அமைச்சர்

சன்ன ஜயசுமன – சுகாதாரத்துறை அமைச்சர்

நஸீர் அஹமட் – சுற்றாடல்துறை அமைச்சர்

பிரமித பண்டார தென்னக்கோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்

புதிய அமைச்சரவை இன்று காலை 10.30 மணியளவில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 3ஆம் திகதி இரவு முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்திருந்தது. இதனை தொடர்ந்து 4ஆம் திகதி நிதி, வெளிவிவகாரம், கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குறித்த புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளடங்குவதாகவம், ஏனையவர்கள் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் புதிய அமைச்சரவையில் சுமார் 20 பேர் இருப்பார்கள் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.