கொக்கட்டிச்சோலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசை

கொக்கட்டிச்சோலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக இன்று(17) ஞாயிற்றுக்கிழமை நீண்ட வரிசை காணப்பட்டது.

ஆறு நாட்களுக்கு பிறகு பெற்றோல் குறித்த நிரப்பு நிலையத்திற்கு  வந்ததையடுத்தே நீண்ட வரிசை காணப்பட்டது.

கிராமசேவை உத்தியோகத்தர்களின் கண்காணிப்பிலும், பொலிஸாரின் பாதுகாப்பிலும் பெற்றோல் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.