போராட்டத்திற்கு ஆதரவளித்த குற்றச்சாட்டு – பொலிஸ் அதிகாரி பிணையில் விடுதலை!

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் நேற்று கலந்துகொண்டமை தொடர்பில் ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) பொலிஸாரினால் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நீதிவானின் உத்தரவின் பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்திற்கும் எதிரான குறித்த போராட்டத்தில் சீருடையுடன் கலந்துகொண்டு மக்களுக்கு ஆதரவாக குறித்த அதிகாரி குரல் கொடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அதன்பின்னர் அவர் பொலிஸாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டதுடன், ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்பட்டதையடுத்து, கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.