“எங்கள் புத்தாண்டு நடு வீதியில்” – நுவரெலியாவில் போராட்டம் !

ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று (வியாழக்கிழமை ) நுவரெலியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் பொது மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

“எங்கள் புத்தாண்டு நடு வீதியில்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் இளைஞர், யுவதிகள், பெரியோர், சிறியோர், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்தோடு, தலைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்திருந்ததோடு, கோஷங்களையும் எழுப்பியிருந்ததோடு பொலிஸாரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.